சந்தை

நிஃப்டி இந்தியா டூரிசம் இன்டெக்ஸ் என்றால் என்ன?

26 / 100

நிஃப்டி இந்தியா டூரிசம் இன்டெக்ஸ் ஆனது அடிப்படை மதிப்பு 1000 மற்றும் அடிப்படை தேதி ஏப்ரல் 1, 2005ஐ  கொண்டது. இது அரை ஆண்டு மறுசீரமைப்பு மற்றும் காலாண்டு மறுசீரமைப்புக்கு உட்படும். ஆரம்பத்தில், இது நிஃப்டி 500 இலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பங்குகளை கொண்டதாகும் , பயணம் மற்றும் சுற்றுலா அது சார்ந்த நிறுவனங்களை அடிப்படையில் வைத்து இந்த புது நிஃப்டி இந்தியா டூரிசம் இன்டெக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பங்குகள் நிதி மேலாளர்களுக்கான அளவுகோலாகவும் passive funds, ETF, index funds போன்றவற்றிற்கு குறிப்பாகவும்/எடுத்துகாட்டாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஃப்டி இந்தியா டூரிசம் இன்டெக்ஸ் பங்குகள் 

 டூரிசம் மற்றும் அது சார்ந்த துறையில் உள்ள முதல் 30 பங்குகளின் செயல்திறனைக் கண்காணிப்பதே  இந்த இன்டெக்ஸ்ன் நோக்கமாகக் கொண்டுள்ளது. முகேஷ் அகர்வால், என்எஸ்இ குறியீடுகளின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியதாவது; மார்க்கெட்டின் ட்ரெண்டிற்கு ஏற்ப புதுமையான இன்டெக்ஸ் பங்குகள் உருவாக்கப்படுகிறது என்றும், இது போன்ற வளரும் துறைகளில் முதலீடு செய்வதற்கு asset managers மற்றும் முதலீட்டாளர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று கூறினார். இதன் மூலம் சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் மேலும் முதலீடுகளை ஈர்த்து வலுப்பெறலாம் என்று சந்தை சார்ந்த ஆய்வாளர்களும் கூறுகின்றனர். 

குறிப்பு: இதில் இடம் பெற்றிருக்கும் பங்குகள் காலாண்டு அல்லது அரையாண்டிற்கு ஒரு முறை மறுதலுக்குட்பட்டது.

இதில் இடம் பெற்றிருக்கும் முக்கிய பங்குகளும் அதன்  weightageம் 

Company’s Name Weight(%)
InterGlobe Aviation Ltd. 20.01
Indian Hotels Co. Ltd. 19.89
Indian Railway Catering And Tourism 14.4
GMR Airports Infrastructure Ltd. 9.72
Jubilant Foodworks Ltd. 8.78
EIH Ltd. 4.26
Lemon Tree Hotels Ltd 3.11
Sapphire Foods India Ltd 2.92
Devyani International Ltd. 2.76
Westlife Foodworld Ltd. 2.58

 

Company Name Symbol
BLS International Services Ltd. BLS
Chalet Hotels Ltd. CHALET
Devyani International Ltd. DEVYANI
EIH Ltd. EIHOTEL
Easy Trip Planners Ltd. EASEMYTRIP
GMR Airports Infrastructure Ltd. GMRINFRA
Indian Hotels Co. Ltd. INDHOTEL
Indian Railway Catering And Tourism Corporation Ltd. IRCTC
InterGlobe Aviation Ltd. INDIGO
Jubilant Foodworks Ltd. JUBLFOOD
Lemon Tree Hotels Ltd. LEMONTREE
Mahindra Holidays & Resorts India Ltd. MHRIL
Restaurant Brands Asia Ltd. RBA
Safari Industries (India) Ltd. SAFARI
Sapphire Foods India Ltd. SAPPHIRE
V.I.P. Industries Ltd. VIPIND
Westlife Foodworld Ltd. WESTLIFE

சுற்றுலா முதலீட்டிற்க்கான ஒரு புதிய விடியல்

இந்திய துணைக்கண்டம், என்பது வளமான கலாச்சாரம், பாரம்பரியம், பல்வேறு வகையான நிலப்பரப்புகள் மற்றும் வரலாற்று அடையாளங்கள் கொண்டது, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு காந்தமாக இருந்து வருகிறது. இந்திய சுற்றுலாத் துறையின் வளர்ச்சி வாய்ப்புகளை உணர்ந்து, இந்திய தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி இந்தியா சுற்றுலா குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையில் முதலீட்டாளர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை இது வழங்குகிறது.

நிஃப்டி இந்தியா சுற்றுலா குறியீட்டின் முக்கியத்துவம்

பொருளாதார பங்களிப்பு 

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளது, கணிசமான வேலைவாய்ப்பை உருவாக்குகிறது மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Investment Diversification

தங்கள் போர்ட்ஃபோலியோக்களை பல்வகைப்படுத்த விரும்பும் முதலீட்டாளர்களுக்கு சுற்றுலா துறையும் ஒரு விருப்பத்தேர்வு மேலும் இது வளர்ச்சிக்கு தயாராக இருக்கும் ஒரு துறையாக திகழ்கிறது.

கொள்கை முடிவுகள்

சுற்றுலா தொடர்பான கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளின் செயல்திறனை அறிய, கொள்கை வகுப்பாளர்களும் அரசாங்க அமைப்புகளும் நிஃப்டி இந்தியா சுற்றுலா குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

எ.க)பிரதமர் அவர்கள் லட்சதீவில் எடுத்த புகைப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது 

சுற்றுலாத்துறையில் இருக்கும் தொழில்கள் 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்யும் முன்னணி ஹோட்டல் சங்கிலிகள் மற்றும் விருந்தோம்பல் சேவை நிறுவனங்கள்.

எ.க) மஹிந்திரா ஹாலிடேய்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ் 

பயண சேவைகள்

பயண முன்பதிவு சேவைகள், டூர் ஆபரேட்டர்கள் மற்றும் தடையற்ற பயண அனுபவங்களை வழங்கும் ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகளை மற்றும் அதன் கிளை நிறுவனங்கள்.

எ.க)Ease My Trip, IXIGO 

விமான போக்குவரத்து

விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய சேவை வழங்குநர்கள்; இலக்குகளை இணைப்பதிலும் பயண வசதியை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

எ.க)Indigo,  Global Vectra Helicorp 

சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான காரணிகள்

இந்தியாவில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன, இததில் நிஃப்டி இந்தியா சுற்றுலா குறியீடு கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பாக மாற்றுகிறது.

அதிகரித்து வரும் செலவழிப்பு

நடுத்தர வர்க்கத்தினரிடையே செலவழிக்கக்கூடிய தன்மை அதிகரிப்பது, சுற்றுலா மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகளில் அதிக செலவு செய்ய வழிவகுக்கிறது, சுற்றுலா சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கிறது.

அரசின் முயற்சிகள்

‘இன்க்ரெடிபிள் இந்தியா’ பிரச்சாரம், விசா தாராளமயமாக்கல் மற்றும் சுற்றுலா தளங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற அரசாங்க முயற்சிகள் சுற்றுலாவை கணிசமாக உயர்த்தியுள்ளன.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

மக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும் மற்றும் முன்பதிவு செய்யும் விதத்தில்; தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, புதிய இடங்களை ஆராய்வது மற்றும் தேடுவதும் எளிதாகவும், வசதியாகவும் மாற்றியுள்ளது.

கலாச்சாரம் பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மை

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், வரலாற்று அடையாளங்கள் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகள் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை தொடர்ந்து ஈர்க்கின்றன.

கூடுதல் தகவல் 

இது போன்ற புதிய index உருவாக்கத்திற்கு இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பில் சுற்றுலாத் துறையும் வளர்ந்து வரும் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாகும். இந்த வளர்ச்சி அலையில் சவாரி செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் நிஃப்டி இந்தியா சுற்றுலா குறியீட்டை தங்கள் முதலீட்டு இலாகாக்களுக்கு ஒரு பகுதியாக    கருதலாம்.

Note : இருப்பினும் தங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசித்துவிட்டு தங்கள் முதலீட்டை மேற்கொள்ளவும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button