சந்தை
Trending

Nifty Tata Group 25 Cap என்றால் என்ன?

29 / 100

டாடா குழுமம் நீண்ட காலமாக இந்தியாவில் நம்பிக்கை, புதுமை மற்றும் வணிகத்தின் முன்னோடியாகவும், அடையாளமாகவும் இருந்து வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், கார்கள், தகவல் தொழில்நுட்பம், எஃகு மற்றும் தொலைத்தொடர்பு வரை பல்வேறு தொழில்களில் அதன் இருப்பை நிறுவியுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் அவர்கள் ஆற்றிய பங்கினை கருத்தில் கொண்டு, டாடா குழும நிறுவனங்களை பலவற்றை மையமாகக் கொன்டு பங்குக் குறியீட்டை உருவாக்கியது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. அத்தகைய ஒரு குறியீடு தான் நிஃப்டி டாடா குழுமம் 25 கேப் ஆகும், இது முதலீட்டாளர்களுக்கு டாடா குழும நிறுவனங்களில் ஒரு கலவையாக மேலும் முதலீடு செய்ய வழிவகை செய்கிறது.

Nifty Tata Group 25 Cap என்றால் என்ன?

Nifty Tata Group 25 Cap என்பது டாடா குழுமத்துடன் தொடர்புடைய முதல் 25 நிறுவனங்களின் செயல்திறனைக் கண்காணிக்கும் ஒரு பங்குச் சந்தைக் குறியீடாகும், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், எஃகு, நுகர்வோர் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் பல துறைகளில் உள்ள டாடா நிறுவனங்களின் செயல்திறன் இந்த குறியீட்டு எண்ணில் அடங்கும். இந்த குறியீட்டின் முதன்மை நோக்கம், டாடா குழும வணிகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் செயல்திறனுக்கான பலன்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாகும், இதில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய சந்தையில் மிகவும் நன்கு நிறுவப்பட்ட மற்றும் நிலையான பெயர்களை கொண்ட நிறுவனங்கள் ஆகும்.

இந்த இன்டெக்ஸ் ஆனது வருடம் இருமுறை டாடா குழுமத்தின் செயல்திறனை பொருத்து மாற்றி அமைக்க படுகிறது.

Nifty Tata Group 25 Cap முக்கிய அம்சங்கள்

டாடா குழும நிறுவனங்களின் பன்முகப்படுத்தப்பட்ட இண்டெக்ஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் போன்ற முன்னணி நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாடா நிறுவனங்களை இந்தக் குறியீடு கொண்டுள்ளது. பல துறைகளை சார்ந்த நிறுவனங்கள் இருப்பதனால் முதலீட்டாளர்கள் பல்வேறு தொழில்களில் பங்கேற்க அனுமதிக்கிறது அதுமட்டுமில்லாமல் சந்தை சார்ந்த ஆபத்தையும் குறைக்க உதவுகிறது.

பங்குகளுக்கான உச்சவரம்பு

நிஃப்டி டாடா குரூப் 25 கேப்பின் ஒரு முக்கிய அம்சம், தனிப்பட்ட ஒரு பங்கினை சார்ந்து அதன் ஏற்ற இறக்கத்தை (volatility) குறைப்பதாகும். இதனால் எந்த ஒரு நிறுவனமும் குறியீட்டில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. இதனால் டாடா குழும வணிகங்களை பின்பற்றுவதில் சமநிலையான அணுகுமுறை தொடர்கிறது.

எ . க) titanஐ மட்டும் ஏற்றி இந்த குறியீட்டை manipulate செய்ய முடியாது.

விரிவான பிரதிநிதித்துவம்

இந்த குறியீட்டில் டாடா குழுமத்தில் உள்ள பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் உள்ளன. குழுமத்தின் வணிகங்கள், IT, நுகர்வோர் தயாரிப்புகள், ஸ்டீல் மற்றும் பலவற்றில் அதன் விரிவான வெளிப்பாடுகளை வழங்குகிறது .

வரலாறு, வலிமை மற்றும் ஸ்திரத்தன்மை

 டாடா குழும நிறுவனங்கள் நீண்ட கால வரலாறு, திடமான பெருநிறுவன நிர்வாகம் மற்றும் நிலையான வளர்ச்சியை கொண்டவை. நிஃப்டி டாடா குரூப் 25 கேப்பில் முதலீடு செய்வது, நீண்ட காலத்திற்கு நிலையான வருமானத்திற்கான சாத்தியத்தை ஏற்படுத்துகிறது.

நிஃப்டி டாடா குரூப் 25 கேப்பில் முதலீடு செய்வதன் நன்மைகள்

நம்பகமான பிராண்ட்

கார்ப்பரேட் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறையான வணிக நடைமுறைகள் இவற்றை  முழுமையாக பின்பற்றி டாடா குழுமம் தன் நற்பெயரை தற்போதுவரை தக்கவைத்துள்ளது. முதலீட்டாளர்கள் நீண்டகால வளர்ச்சி மற்றும் பொறுப்புக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதனால் நம்பிக்கையுடன் நடைபோடமுடியும்.

தொழில்துறையில் ஒரு டான் 

டிசிஎஸ் (ஐடியில்), டாடா மோட்டார்ஸ் (ஆட்டோமொபைல்களில்), டாடா ஸ்டீல் (உலோகங்களில்), மற்றும் டைட்டன் கம்பெனி (சில்லறை விற்பனையில்) போன்ற பல தொழிலில் யாரும் எட்டி பிடிக்கமுடியாத இடத்தில் டாடா குழுமம் ஒரு டானாக வலம்வருகிறது. இக்கம்பெனியில் முதலீடு செய்திருப்பதனால் முதலீட்டாளர்களும் அந்தந்த துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்களாக இருக்கின்றனர்.

போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தல்

ஒரே குழுமத்தில் பல்வகைப்படுத்த துறைகளை சார்ந்த பங்குகள் இதில் இருப்பதனால் முதலீட்டாளர்கள் டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலிருந்து பயனடையும் வகையில் உள்ளது. அதே வேளையில், diversification பலமாக இருப்பதனால் சந்தை அபாயத்தை குறைத்துள்ளது.

நீண்ட கால வளர்ச்சிக்கான வாய்ப்பு

பல டாடா குழும நிறுவனங்கள் வரும் தசாப்தங்களில் மின்சார வாகனங்கள் (டாடா மோட்டார்ஸ்), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (டாடா பவர்) மற்றும் AI தொழில்நுட்ப சேவைகள் (TCS) போன்ற அதிக வளர்ச்சி திறன் கொண்ட தொழில்களில் செயல்படுகின்றன. இந்தத் துறைகள் விரிவடைவதால், டாடா நிறுவனங்கள் சந்தையில் தங்களின் இருப்பிடத்தை வேகமாக அதிகரிக்கின்றனர்.

passive முதலீட்டு உத்தி

நிஃப்டி டாடா குரூப் 25 கேப்ல்; முதலீட்டாளர்கள் தனிப்பட்ட நிறுவனங்களைத் தேர்வு செய்யாமல் டாடா குழுமப் பங்குகளை குழுவாக வாங்குவதற்கு நேரடியான வழியை வழங்குகிறது. இந்த etf மூலம் சில்லறை முதலீட்டாளர்கள் சந்தையில் பங்குபெறுவதை எளிதாக்குகிறது.

நிஃப்டி டாடா குரூப் 25 கேப்பில் யார் முதலீடு செய்யலாம்?

  • இந்தியாவின் மிகப் பெரிய கூட்டு நிறுவனத்தில், பன்முகப்படுத்தப்பட்ட, நீண்ட கால முதலீடை தேடும் முதலீட்டாளர்கள் இந்தக் குறியீட்டில் முதலீடு செய்யலாம்.
  • டாடா குழும ஆர்வலர்கள் மற்றும் டாடா பிராண்டிலும் அதன் வணிகத் தத்துவத்திலும் நம்பிக்கை கொண்டவர்கள் இதில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.
  • நீண்ட கால முதலீட்டாளர்களும், வலுவான கார்ப்பரேட் நிர்வாகத்துடன் நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் இதில் தொடர்ந்து பயணிக்கலாம்.

அபாயங்கள்

நிஃப்டி டாடா குரூப் 25 கேப்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில அபாயங்கள் உள்ளன:

டாடா குழுமத்திற்குள் பன்முகப்படுத்தப்பட்டாலும், சில துறைகள் (IT, ஸ்டீல்  அல்லது ஆட்டோமொபைல் போன்றவை) குறியீட்டில் இவர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். இந்தத் துறைகளில் சந்தை வீழ்ச்சியை காணும்போது குறியீட்டின் ஒட்டுமொத்த செயல்திறனைப் பாதிக்கலாம்.

இந்த குறியீடானது டாடா குழும நிறுவனங்களை மட்டுமே உள்ளடக்கியது, அதாவது மற்ற பெரிய இந்திய கூட்டு நிறுவனங்கள் அல்லது சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் இதில் இல்லை. இந்த குழுமத்தில் எதாவது கேட்ட செய்தியோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் இந்த குறியீடு பாதிப்படையலாம்.

டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற பல டாடா நிறுவனங்கள், உலகளாவிய பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்படக்கூடிய சுழற்சித் தொழில்களில் உள்ளன.

கூடுதல் தகவல்கள்

நிஃப்டியில் நிஃப்டி டாடா குரூப் 25 கேப்பின் அடையாளம் என்ன ? 

Nifty Tata Group 25 Cap ன் அடையாளம் NFTYTATA25.

Nifty Tata Group 25 Capல் உள்ள துறைகளின் பங்கீடு

  • Information Technology – 27.29%
  • Automobile and Auto Components – 18.56%
  • Consumer Services – 17.03%
  • Consumer Durables – 15.01%
  • Metals & Mining – 10.02%
  • Fast Moving Consumer Goods – 6.24%
  • Power – 5.86%

Nifty Tata Group 25 Capல் உள்ள நிறுவனங்களின் பங்கீடு

Tata Consultancy Services Ltd. 25.07%

Tata Motors Ltd. 18.56% 

Trent Ltd. 12.56% 

Titan Company Ltd. 11.84% 

Tata Steel Ltd. 10.02% 

Tata Consumer Products Ltd. 6.24% 

Tata Power Co. Ltd. 5.86% 

Indian Hotels Co. Ltd. 4.47% 

Voltas Ltd. 3.17% 

Tata Elxsi Ltd. 2.22%

ஆதாரம் – https://www.niftyindices.com/Factsheet/Ind_NIFTY_TATA_GROUP_25_Cap.pdf

Read More: Nifty India Tourism Index

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button