நிதி

ஆபரண தங்கம் VS  தங்கம் ETF 

63 / 100

தங்கம்

தங்கம் என்ற சொல்லுக்குத் தான் எவ்வளவு மரியாதை இதன் மீதுதான் எவ்வளவு ஈர்ப்பு இதை வேண்டாத வரும் உண்டோ என்று வியக்கும் அளவுக்கு மனித குலத்தின்  மனம் கவர்ந்த பொருளாக தொடர்ந்து பல ஆண்டுகளாக பொருளாதார அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்து வரும் அரியதொரு மஞ்சள் உலோகம்.

இந்திய ரூபாய் நம் நாட்டிலும் நேபாளத்திலும் செல்லுபடியாகும் யூரோவை ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தலாம். டாலரை  அமெரிக்க நாட்டில் மட்டுமல்லாமல் இன்னும் சில நாடுகளிலும் செல்லுபடியாகும் ஆனால், உலகம் முழுவதும் கேள்வி கேட்பாரின்றி விலைபோகும் ஒரே பொருள் இந்த மஞ்சள் உலோகம் தான்.

gold etf in tamil
gold etf in tamil

தங்கத்தில் முதலீடு : 

சேமிக்க வேண்டும் என்பது அடிப்படை.ஆனால், சேமித்தால் மட்டும் போதாது சேமிக்கும் பணத்தை சரியாக முதலீடு செய்ய வேண்டும் முதலீடுகள் தான் வருமானம் தரும்.

பொதுவாக சிரமமான காலங்களில் நிலம் வீடு பிற அசையா சொத்துக்களை விட ரொக்கப் பணம் தான் மேல் என்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட ரொக்க காசுகள், ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கங்களின் போது பயனற்றுப் போகும், சிரமம் கொடுக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் கூட மதிப்பு குன்றாதது தங்கம் தான்.

சேமிக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்வது என்பது பற்றி அதிகம் யோசிக்காமல் பலரும் சுலபமாக செய்யும் முதலீடுகளில் ஒன்று தங்கம் வாங்குவது. உபரியாக சிறப்பான எதிர்பாராமல் கிடைக்கிற தொகைகள் மட்டுமல்ல. எவருக்கும் கொடுக்க நினைக்கும் பரிசுகள் போன்றவற்றையும் போய் முடிவது தங்கத்தில் தான்.

ஆபரண தங்கம் (Physical Gold) : 

ஆபரண தங்கம் என்பது நம் கையில் வைத்துக் கொள்ளும் நகைகள். தங்கத்தில் வாங்கினால் அதன் மீது வரி உண்டு முன்பெல்லாம் விற்பனை வரி, இந்த வரி என்று சில இருந்தன இப்போது எல்லாம் சேர்த்து ஒரே வரிதான் அதன் பெயர் ஜி எஸ் டி . தற்போது நிலவரப்படி ஜிஎஸ்டி வரி அளவு 3% லட்ச ரூபாய்க்கு ₹3000 . நாம் வாங்குகின்ற தங்கம் என்ற பொருள் மீதுதான் மூன்று சதவீத வரி செயலின் மீது 18 சதவீத வரி எனவே பில் போட்டு வாங்கும் போது இவற்றை கவனிக்க வேண்டும். 

உதாரணத்திற்கு: ஒரு கிராம் தங்கத்தின் விலை ஐயாயிரம் ரூபாய் நாம் 10 கிராம் வாங்குகிறோம். நாம் வாங்கும் தங்கத்தின் செய்கூலி மட்டும் 15% அப்படி என்றால் 7,500 ரூபாய் ஆகிவிடும்.

இறுதியில் பில் போடும்போது 10 கிராம் தங்கத்தின் விலை 50 ஆயிரம் + அதன் மீது 3 சதவீத வரி 7,500 ரூபாய் செய்கூலி +  அதன்மீது 5% ஜிஎஸ்டி ரூ 375.

இதுதவிர சேதாரம் என்று ஒன்று இருக்கிறது நகை செய்யும் போது வீணாகும் தங்கத்தை தான் சேதாரம் என்று சொல்கிறார்கள். 

பின்குறிப்பு :

தங்கத்தை ETF என்ற முறையில் பங்குச்சந்தையிலும் வாங்கலாம். அதன் ஏற்ற இறுக்கமானது உலக தங்க சந்தையினை பிரதிபலிக்கும். இந்தியாவிலும் சில தங்க ETF பங்குச்சந்தை பட்டியலில் உள்ளது எடுத்துகாட்டு .) Nippon India ETF Gold BeES

இதை பற்றி மேலும் விபரம் நன்கு அறிந்துகொண்டு உங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ளுங்கள் 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button