சில்லறை வணிகர்களுக்கு கைகொடுக்கும் சமூகவலைத்தல பிரபலங்கள்
முன்னுரை
தற்போது சில்லறை விற்பனையில் பாரம்பரியமாக சந்தைப்படுத்தும் யுக்திகள் பெரிதும் மாற்றம் அடைந்துள்ளது காரணம் சமூக வலைத்தளத்தின் அபிரிவிதமான பயன்பாடு சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் நபர்களுடன் கூட்டு சேர்ந்து விளம்பரம் படுத்துவதன் மூலம் தங்களின் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரவும், தங்களின் பொருட்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் முடியும் இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் மற்றும் சில்லறை பிராண்டுகளுக்கு அவர்களின் விற்பனையை மேம்படுத்த சில துணுக்கு செய்திகளை இப்பதிவில் காண்போம்
இன்ஃப்ளுயன்சர் மார்க்கெட்டிங் பற்றிய புரிதல்
இன்றைய சில்லறை விற்பனை பயணத்தில் இன்ஃப்ளுயன்சர் மார்க்கெட்டிங் முக்கியத்துவத்தை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும் சமூக வலைதளத்தில் செல்வாக்கு செலுத்தும் நபர்கள் தங்களை பின்தொடர்பவர்களுடன் எவ்வாறு நம்பகமான நபர்களாக மாறியுள்ளனர் என்பதைப் பற்றி அறிக ஒரு தனிநபர், பொருளை வாங்கும் முடிவில் எவ்வாறு அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை காணுங்கள். எ.க) எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் வீட்டு உபயோக பொருட்கள்,
சரியான இன்ஃப்ளுயன்சரை கண்டறிதல்
உங்கள் ப்ராண்டுக்கு தொடர்புடைய இன்ஃப்ளுயன்சரை எவ்வாறு கண்டறிவது என திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள் அதில் சில முக்கிய அளவீடுகளான
- பார்வையாளர்கள்
- பார்வையாளர்களின் வயது
- பார்வையாளர்களின் இடம்
- பார்வையாளர்களின் விருப்பங்கள் (eg. Likes)
போன்ற புள்ளிவிவரங்களை ஆராய்ந்து இன்ஃப்ளுயன்சர்களின் வகையை தேர்வு செய்து அவர்களுடன் நல்ல ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திகொள்ளவும்
சில்லறை விற்பனையாளர்கள் தங்களின் இருப்பிடத்தில் உள்ள பிரபல சமூக வலைதளநபர்களை தேர்வு செய்வதே நல்லது உதாரணத்திற்கு, திருநெல்வேலியை சேர்ந்த நிறுவனமானது அங்குள்ள வாடிக்கையாளரை கவர வேண்டுமென்றால் அப்பகுதியில் உள்ள இன்ஃப்ளூயன்சரை அணுகுவது நல்ல பலனை தரும்.
பயனுள்ள இன்ஃப்ளூயன்சர் உத்தியை உருவாக்குதல்
இன்ஃப்ளூயன்சரை தேர்வு செய்த பிறகு அவர்களை எப்படி? எவ்வாறு முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்று ஒரு வரையறை ஏர்படுத்திக்கொள்க அதில் சில முக்கியமான உத்திகளை தவறாமல்
கையாளவேண்டும் அவை,
- தெளிவான இலக்குகளை (Goals) நிர்ணயித்தல்
- பட்ஜெட்டை உருவாக்குதல்
- செய்தியை வடிவமைத்தல்
- வாடிக்கையாளர் பார்வைகள் மற்றும் விற்பனை விகிதம்.
ஆகியவற்றை முறையாக ஒரு campaignஐ நடைமுறை படுத்தும்போது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்ஃப்ளூயன்சருடன் உண்மையான உறவுகளை (Relationship) உருவாக்குதல்
ஆன்லைன் இன்ஃப்ளூயன்சருடன் நீண்ட காலம் பயணிப்பதே தங்களின் தொழிலுக்கும் ப்ராண்டுக்கும். மக்களிடம் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும்
பரஸ்பர மரியாதை வெளிப்படைத்தன்மை மற்றும் உங்கள் பிராண்டை திறம்பட வெளிப்படுத்த இன்ஃப்ளூயன்சர்களுக்கு ஆக்கப்பூர்வமான சுதந்திரத்தை வழங்குவதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தவும்.
விளம்பர உருவாக்கத்தின் போதும் மற்றும் ஒரு campaignஐ செயல் படுத்தும்போதும் கருத்து பரிமாற்றம் மிக அவசியம்.
கன்டென்ட் உருவாக்குதல் மற்றும் ஒத்துழைத்தல்
இன்ஃப்ளூயன்சருடன் உங்கள் கன்டென்ட் ஆனது எவ்வாறு வாடிக்கையாளரின் ஈடுபாட்டை தூண்டும். தங்களின் ப்ராண்ட் ஆனது எத்தனை நபரை சென்றடையும் போன்றவற்றை இருவரும் இணைந்து, உருவாக்குதல் மற்றும் கருத்தொற்றுமை அவசியம்
தங்களின் கன்டென்ட் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றலாம் உதாரணத்திற்கு
- பொருளின் மதிப்பாய்வு
- Unboxing
- Tutorial
- behind-the-scenes glimpses
போன்ற சிறு சிறு வீடியோக்கள் சில்லறை ப்ராண்ட் வர்த்தகர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
சமூக வளைதளங்கள் மற்றும் வணிகத்தை மேம்படுத்துதல்
பல்வேறு சமூக ஊடக தளங்களில் influencer மூலம் விளம்பங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை ஆராயுங்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் முகநூல் மற்றும் பிற தளங்களின் தனித்துவமான நன்மைகள் மற்றும் ஒவ்வொரு சேனலுக்கும் உள்ளடக்கத்தை எவ்வாறு திறம்பட மாற்றுவது என்பதை ஆராயுங்கள் இதன் மூலம் எந்த மாதிரியான வாடிக்கையாளரை யார் மூலம் அணுகலாம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
விளம்பரத்தின் செயல்திறனை அளவிடுதல் மற்றும் பகுப்பாய்வு(Analyze) செய்தல்
விளம்பரங்களை இன்ப்ளூயன்சர் மூலம் விநியோகிக்கும்போது அதன் (kpi) key performance indicators பகுப்பாய்வு செய்யுங்கள் அப்போதுதான் இன்ப்ளூயன்சர்ரின் வெற்றியை நீங்கள் கணக்கீடலாம் அதில் முக்கியமாக ரீச்(Reach), ஈடுபாடு(Engagement), Conversions மற்றும் முதலீட்டின் மீதான வருமானம் (ROI) போன்ற அளவீடுகளைப் பற்றி விவாதிக்கவும் மேற்குறிய அளவீடுகளின் முடிவில் உங்கள் விளம்பரத்தின் முழு செயல்பாடுகளையும் அறிய முடியும்
உடன்பாடு மற்றும் நல் இணக்கம்
இன்ப்ளூயன்சர்களுடன் பணிபுரியும் போது விளம்பர வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குங்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கம் மற்றும் நெறிமுறை நடைமுறைகளைப் பராமரிப்பதில் வெளிப்படை தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள் இந்த நல் இணக்கமானது இருவருக்கும் நல்ல பயனை தரும் ஆரோக்கியமான தொழில் வளர்ச்சியும் இதன் மூலம் ஏற்படும்
நீண்ட கால பிராண்டாக உருவாக்குதல்
இன்ஃப்ளூயன்ஸர் கூட்டாண்மை மூலம் நீண்ட கால பிராண்ட் உருவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகளை
தெளிவுபடுத்துங்கள் பிராண்ட் நம்பகத்தன்மை மற்றும் சந்தையில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு இன்ப்ளூயன்சர்ன் நீடித்த ஒத்துழைப்பு எவ்வாறு பங்களிக்கும் என்பதை விவாதிக்கவும்.
விளம்பரப்படுத்துபவர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர் இருவரும் கூட்டாக நீண்ட காலம் பணியாற்றுவது சிறந்த
பிராண்டை உருவாக்கத்திற்கான நல்ல அடித்தளமாகும். நேரடியாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதை காட்டிலும் இன்ப்ளூயன்சர் மூலம் விளம்பரம் செய்வது செலவினங்களை குறைக்கும் அதுபோல தங்களின் நிறுவனத்தை ஒரு பிராண்டாகவும் மாற்றும்
சந்தை ஆய்வுகள் மற்றும் வெற்றிக் கதைகள்
நிஜ வாழ்க்கையில் நடந்த உதாரணங்களும் சந்தையில் மேற்கொண்ட ஆய்வுகளும் influencerன் ஆதிக்கத்தையும் அவர்களின் பயன்பாடுகளையும் எடுத்துரைக்கலாம் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருளின் நிறுவங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அவர்கள் இன்ஃப்ளுயன்ஸர் மார்க்கெட்டிங் மூலம் சாதாரண மக்களுக்கும் தங்களின் பொருளை எவ்வாறு கொண்டு சேர்த்தனர் என்பதையும் படிப்பினையாக எடுத்து கொள்ளலாம்
சந்தை ஆய்வுகளின் படி நேரடியாக mass media மார்கெட்டிங்கை காட்டிலும் இந்த இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங்ல் அதிக பணத்தை மிச்ச படுத்தவும் முடியும், சரியான நபர்களுக்கு மட்டும் தோராயமாக உங்களின் சேவை அல்லது பொருளை கொண்டு பொய் சேர்க்க முடியும்
உதாரணத்திற்கு தற்போதைய வெற்றிக் கதைகளாக KGF Menswear போன்ற நிறுவனங்களை கூறலாம். அதேபோல் blue sattai maran, food review irfan போன்ற இன்ஃப்ளூயன்ஸர்ஸ்களையும் பயன்படுத்தலாம்.
முடிவுரை
இன்ஃப்ளுயன்சர் மார்க்கெட்டிங் சில்லறை வர்த்தக பிராண்டுகளுக்கு நுகர்வோருடன் மிக உணமையாகவும் மற்றும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களுடன் இணைக்கும் வகையில் நம்பமுடியாத வாய்ப்பை வழங்குகிறது இம்மாதிரியான டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சர் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் மூலம் சில்லறை மற்றும் நடுத்தர வர்த்தக பிராண்டுகள் மக்களிடம் பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்கலாம். மேலும் பார்வையாளர்களிடம் இருந்து நிறைய நேர்மறையான கருத்துக்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம். இறுதியாக தங்களின் விற்பனையை அதிகரிக்கலாம் இன்ஃப்ளுயன்சர்ருடன் கூட்டணி அமைப்பதே பெரும் சவாலான விடயம் அதையும் தாண்டி முன்னேறினால் அதிக போட்டி நிறைந்த சந்தையில் சில்லறை வர்த்தக் பிராண்டுகளும் செழிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை இன்ஃப்ளுயன்சர் மார்க்கெட்டிங் ற்கு வருங்காலத்தில் பிரகாசமான வாய்ப்புகள் இருக்கிறது
Tags : Influencer Marketing Tamil