ஒரு தொழிலை எளிமையாக தொடங்குவது எப்படி?அதன் வழிமுறைகள் என்ன?
முன்னுரை
ஒரு தொழிலை தொடங்குவது என்பது உங்களுக்கு உற்சாகத்தையும் அதனுடன் சேர்ந்து சவாலான பயணத்தை அளிப்பதாக அமையும், மேலும் இது தொழில்முனைவோர் உலகில் உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் சேர்த்து வழங்குகிறது. இருப்பினும் தொழில் தொடங்கும் இந்த முடிவை நீங்கள் லேசாக எடுத்திருக்கமாட்டீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த வலைப்பதிவில் உங்கள் தொழில்முனைவோர்க்கான கனவினை நனவாக்கும் விதமாக; நாங்கள் வணிகத்தை தொடங்குவதற்கு சில குறிப்புகளை வழங்குகின்றோம்.
சுயமதிப்பீடு
நீங்கள் தொழிலில் இறங்குவதற்கு முன் உங்களின் முயற்சி, தனிப்பட்ட திறன்கள்(skills) மற்றும் தயார்நிலை ஆகியவற்றை சுயமதிப்பீடு செய்வது அவசியம்.
ஒரு தொழிலைத் தொடங்கும்போது ஏற்படும் சவால்கள், கடின உழைப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு நீங்கள் தயாரா?. தயார் என்றால் நீங்கள் சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை மதிப்பிடுங்கள்.
(தொழில்) Business idea மற்றும் சந்தை ஆராய்ச்சி
முதலில் உங்கள் Business ideaல் இருந்தே தொடங்குங்கள்! அதை வரையறை செய்யுங்கள்
- உங்களின் தயாரிப்பு அல்லது சேவை எந்த சிக்கலை தீர்க்கிறது?
- உங்களின் வாடிக்கையாளர்கள் யார்?
- உங்கள் தொழிலின் போட்டியாளர்கள் யார்?
- சந்தையின் போக்கை (trend) புரிந்துகொண்ட தேவைக்கான பொருளை உங்களால் வழங்க முடியுமா?
இது போன்றவற்றை புரிந்துகொள்ள முழுமையான சந்தை ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள்
வணிக திட்டம் – Business Plan
நன்கு கட்டமைக்கப்பட்ட வணிகத் திட்டமே உங்கள் வெற்றிக்கான வரைபடமாகும் இது உங்கள் வணிக இலக்குகள், யுக்திகள், நிதி கணிப்புகள்(financial projection) மற்றும் பலவற்றை கோடிட்டுக் காட்டுகிறது.
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் கடன்களைப் பெறுவதற்கும், உங்கள் வணிகத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்கும் வலுவான திட்டம் அவசியம்.
சட்ட அமைப்பு மற்றும் பதிவு (Registration)
உங்கள் வணிகத்திற்கு மிகவும் பொருத்தமான சட்ட அமைப்பைத் தேர்வுசெய்யவும்.
அது ஒரு தனியுரிமை (proprietorship), கூட்டாண்மை (partnership), LLC அல்லது பெருநிறுவனமாக கூட இருக்கலாம்.
பொருத்தமான எ.க)MSME போன்ற அரசாங்க நிறுவனத்திடம் உங்கள் வணிகத்தைப் பதிவுசெய்து, தேவையான உரிமங்களைப் பெறவும் அதேநேரம் உள்ளூர் விதிமுறைகளுக்கு இணங்குவதையும் உறுதி செய்யவும்.
வணிகத்திற்கான நிதி
ஒரு வணிகம் தொடங்குவதற்கு நிதி இன்றியமையாதது. எனவே அதை எந்த வழியில் திரட்டலாம் என்பதை ஆராயுங்கள், உதாரணத்திற்கு
- உங்களின் சேமிப்பு
- கடன்கள்
- அரசு மானியங்கள்
- முதலீடுகள்
மூலம் நீங்கள் உங்கள் வணிகத்தின் மூலதனத்தை கட்டமைக்கலாம். இந்த நிதியானது உங்கள் வணிகத்தை நிர்வகிக்கவும் அது வளரும்போது உங்கள் வணிகத்தைத் தக்கவைக்கவும் உதவும்.
பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்துதல் (Marketing)
தங்களின் தொழிலை தொடங்கும்போதே ஒரு வலுவான அடையாளம் மற்றும் சந்தைப்படுத்தல் உத்தியை உருவாக்குங்கள். உங்களுக்கான ஒரு சின்னம் (logo), ஒரு வணிகப்பெயர், மற்றும் ஒரு website இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் உங்கள் முதல் இலக்கு தங்களின் வாடிக்கையாளர்களை நீங்கள் எவ்வாறு அடைவீர்கள் என்பதைத் தீர்மானித்து, அதற்கேற்ப உங்களின் தயாரிப்புகளை அல்லது சேவைகளை திறம்பட விளம்பரப்படுத்துங்கள்.
தங்களின் தயாரிப்புகளை சந்தைபடுத்துவதற்கு ஏகபட்ட Marketing உத்திகள் உள்ளன அதை பிறகு காணலாம். எனினும் ஆன்லைன் வர்த்தகம் என்பது இன்று கொடிகட்டி பறக்கிறது என்பது கூடுதல் தகவல்!
இருப்பிடம் (Location) மற்றும் உள்கட்டமைப்பு
முதலில் உங்கள் வணிகத்திற்கு இருப்பிடம் (Location) தேவையா என்பதை தீர்மானிக்கவும் ஏனென்றால் உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் தொழிற்கேற்ப இடத்தின் அளவு வேறுபடும் ஆனால் சேவை தொழிலில் ஈடுபடுவர்களுக்கு பெரிய அளவில் இடம் தேவைப்படாது (சில நேரம் விதிவிலக்கு) அப்படி இடம் தேவைப்பட்டால் பொருத்தமான தளத்தை தேர்ந்தெடுத்து தேவையான உள்கட்டமைப்பை அமைக்கவும். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் நம்பகத்தன்மையான Ecommerce வலைத்தளம் மற்றும் டிஜிட்டல் மார்கெட்டிங்கில் கவனம் செலுத்தலாம்.
நிதி மேலாண்மை மற்றும் கணக்கியல் (Accounting)
உங்கள் நிறுவனத்தின் நிதி நிலையை திறம்பட நிர்வகிக்க ஒரு கணக்கியல் அமைப்பை (Accounting Systern) உருவாக்கவும் அதில் முக்கியமாக
- வணிக வங்கி கணக்கை அமைப்பது
- வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிப்பது
- பட்ஜெட்டை உருவாக்குவது
ஆகியவை இதில் அடங்கும்.
பணியாளர்கள் மற்றும் பணியமர்த்தல்
வேலைவாய்ப்பு சட்டங்கள் மற்றும் அதன் ஒழுங்குமுறைகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்கள் வணிகத்திற்கு தேவையான திறமைவாய்ந்த பணியாளர்களை தேர்வு செய்க.
- தெளிவான பணியாளர்களுக்கான வேலை விளக்கங்களை உருவாக்கவும்
- பணியாளர்களுக்கு சந்தையிற்கேற்ப ஊதியங்களை வழங்கவும்
- நேர்மறையான பணி சூழலை வளர்க்கவும்
இந்த மூன்று செயல்திட்டமும் பணியாளர்களுக்கும் தங்களின் நிறுவனத்துக்கும் நல்ல புரிதலை ஏற்படுத்தும்
வணிகத்தின் இயக்கம் மற்றும் தளவாடங்கள் (Logistics)
விநியோகச் சங்கிலி மேலாண்மை (supply chain management), சரக்கு மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட உங்கள் அன்றாடச் செயல்பாடுகளைத் திட்டமிடுங்கள்.
உங்கள் வணிகத்தின் சேவைகள் அல்லது தயாரிப்புகளை திறமையாக வழங்குவதையும், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதையும் உறுதி செய்யவும்.
குறிப்பாக ஒன்லைன் வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களின் சேவையில் மிக கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
சட்டம் மற்றும் ஒழுங்குமுறை
உங்கள் வணிகத்தைப் பாதிக்கும் உள்ளூர், மாநில மற்றும் கூட்டாட்சி விதிமுறைகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருங்கள் நீங்கள் updateஆக இல்லையென்றால் தங்களின் வியாபாரத்தில் சட்டரீதியான இடர்பாடுகள் ஏற்படலாம்.
இதில் வரிகள், அனுமதிகள், அறிவுசார் சொத்து பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு சட்டங்களுக்கு இணங்குதல் அவசியம் .
புதிய சட்டதிட்டங்கள் கொண்டு வரும்பொழுது நிறுவனத்திற்கான சாதக பாதகங்களை ஆராய்க, அவ்வாறு தங்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லையெனில் நல்லதொரு வணிக ஆலோசகரிடம் சென்று தங்களுக்கான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
வணிக வளர்ச்சி மற்றும் தழுவல் (Adaptation)
ஒரு கட்டத்திற்குமேல் உங்கள் வணிகமானது வளர தொடங்கும் அப்போது அதன் வளர்ச்சியின் வேகத்திற்கேற்ப சில வணிக யுக்திகளை மாற்றியமைக்க மற்றும் மேம்படுத்த தயாராக இருங்கள்.
தங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை தொடர்ந்து மதிப்பிடுங்கள் அதிலிருந்து உங்களுக்கு சில வணிக யுக்திகள் கிடைக்கப்பெறலாம்.
சந்தைப்படுத்துதலில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் அவசியமானவை குறிப்பாக விளம்பரங்கள் மற்றும் சந்தையின் தேவை பொறுத்து அவை மாறுபடுகிறது.
முடிவுரை
ஒரு தொழிலைத் தொடங்குவது என்பது ஒரு நிறைவான மற்றும் பலனளிக்கும் முயற்சியாகும், ஆனால் இது ஒரு சவாலான பாதையும் கூட.
கவனமாக திட்டமிடல், உறுதியான உத்தி, தொடர் கற்றல் மற்றும் மாற்று யுக்திகளை கையாளுதல் ஆகியவற்றுடன் உங்கள் வணிகத்தை வெற்றிக்கான பாதையில் இட்டுச்செல்லலாம். நெகிழ்ச்சியுடன் இருங்கள், உங்கள் தொழில் முனைவோர்க்கான கனவுகளைப் பின்தொடர்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள் தொழில் தொடங்குவது வெறும் முயற்சி அல்ல அது ஒரு நல்ல தொழில்முனைவோர்க்கான முதற்படி.